சொந்த ஊரில் நினைத்ததை சாதித்த நடராஜன்.. குவியும் பாராட்டுகள்
சொந்த ஊரில் நினைத்ததை சாதித்த நடராஜன்.. குவியும் பாராட்டுகள்
நடராஜன்
யாக்கர் மன்னன் தங்கராசு நடராஜன் தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி தமிழக வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த நடராஜன் தனது துல்லியமான யாக்கரால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே திணறினர். இதனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் இடம்பிடித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவில் மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஆனால் அதன் பின் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது காயத்திலிருந்து விடுப்பட்டுள்ள அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான பயிற்சிகளை தொடங்கி உள்ளார்.
Happy to Announce that am setting up a new cricket ground with all the facilities in my village, Will be named as *NATARAJAN CRICKET GROUND(NCG)❤️
* #DreamsDoComeTrue🎈Last year December I Made my debut for India, This year (December) am setting up a cricket ground💥❤️ #ThankGodpic.twitter.com/OdCO7AeEsZ
இந்நிலையில் நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது சொந்த ஊரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருக்கிறேன். அந்த கிரிக்கெட் மைதானத்தில் பெயர் நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதல்முறையாக இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினேன். இந்த ஆண்டு டிசம்பரில் எனது கிராமத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருக்கிறேன். கனவுகள் அனைத்தும் நிறைவேறி இருக்கின்றன. கடவுளுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.