சிட்னியில் சீறும் நடராஜன்.... பிசிசிஐ வெளியிட்ட அசத்தல் வீடியோ

ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

சிட்னியில் சீறும் நடராஜன்.... பிசிசிஐ வெளியிட்ட அசத்தல் வீடியோ
வலைப்பயிற்சியில் நடராஜன்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் இளம் வீரர் நடராஜன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி சிட்னியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிட்னியில் வலைப்பயிற்சியில் நடராஜன் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நடராஜன் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெற்று வலைப்பயிற்சி மேற்கொள்கிறார். கனவு மெய்பட்ட தருணம் இது என்று பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.




ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி நடராஜனின் வேகத்தை மட்டுமே நம்பியிருந்தது. துல்லியமான யார்க்கர் மற்றும் தரமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை ரன்சேர்க்க விடாமல் திணறிவிட்டார் நடராஜன்.

சுழற்பந்துக்கு சாதகமான இந்திய மைதானங்களிலேயே நடராஜன் துல்லியமாக யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். வேகப்பந்து பெயர் பெற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் நடராஜனின் வேகத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.



நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading