ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs SA | 18வது ஓவரை அஷ்வினுக்கு வழங்க ரோஹித் எடுத்த முடிவு சரியா? இந்திய பவுலர் என்ன சொன்னார் தெரியுமா?

Ind vs SA | 18வது ஓவரை அஷ்வினுக்கு வழங்க ரோஹித் எடுத்த முடிவு சரியா? இந்திய பவுலர் என்ன சொன்னார் தெரியுமா?

ரவிசந்திரன் அஸ்வின்

ரவிசந்திரன் அஸ்வின்

Ind vs SA | பெர்த் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெர்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு 18வது ஓவரை வீச கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவை பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் ரோஹித்துக்கு இருந்த ஒரே வழி தீபக் ஹூடா மட்டுமே. உண்மையில், போட்டியின் 14வது ஓவரிலும், தனது மூன்றாவது ஓவரிலும் அஸ்வின் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவ்வாறான நிலையில் அவருக்கு 18வது ஓவரை வழங்கியது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்த முடிவை ஆதரித்துள்ளார். அவர் கூறுகையில், பொதுவாக, சுழற்பந்து வீச்சாளர் ரன்விகிதத்தை இறுக்கமாக வைத்திருந்தால், இறுதியில் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கடினம் என்று கருதப்படுகிறது. மேலும் ஸ்பின்னரை கடைசியில் வைத்துக்கொண்டால், பேட்டிங் செய்வது எளிதாகிவிடும். விக்கெட் கிடைத்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

  இந்தியாவில் பனிப்பொழிவு காரணமாக டி20 சர்வதேசப் போட்டிகளில் இலக்கைத் துரத்துவது எளிதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் அது ஒவ்வொரு நகரத்திற்கும் நிலைமைகள் மாறுகின்றன. இது தான் ஆஸ்திரேலிய மைதானத்தின் ஒரு அழகு. இங்கு இலக்கைத் துரத்துவது கடினமாக இருந்தது, ஆனால் அடுத்த நகரத்தில் அது வித்தியாசம் மாறுபடலாம்.

  Also Read : விராட் கோலி ரூம் வீடியோ : மன்னிப்பு கேட்ட பெர்த் ஹோட்டல்.. ஊழியர்கள் பணிநீக்கம்

  கூடுதல் வேகம், பவுன்ஸ் மற்றும் சீம்களை சமாளிக்க ஆடுகளத்தில் திணறிக் கொண்டிருந்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு புவனேஷ்வர் அனுதாபம் தெரிவித்தார். ஆஸ்திரேலிய மைதானங்களில் வேகப்பந்துகளை எதிர்கொள்வது சவலான ஒன்று தான். இதுவரை நடந்த போட்டிகளை ஒப்பிட்டு பார்த்தால் சராசரி ர 140 ஆக இருந்தது. 140 ரன்கள் எடுத்தால் ஆட்டத்தை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை தான் உள்ளது என்று தெரிவித்தார்.

  ஞாயிற்றுக்கிழமை பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஆட்டத்தில் டேவிட் மில்லர் மற்றும் எய்டன் மார்க்ராம் ஆகியோரின் சிறப்பான அரைசதங்களால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: R Ashwin, T20 World Cup