சையது முஸ்தாக் அலி டிராபி : அருண் கார்த்திக் அதிரடியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு

சையது முஸ்தாக் அலி டிராபி

 • Last Updated :
 • Share this:
  சையது முஸ்தாக் அலி டிராபியின் முதல் அரையிறுதி போட்டியில் அருண் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி ராஜஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

  உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபியின் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. முதல் அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் அசோக் மெனரியா சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். தமிழ்நாடு அணி சார்பில் முகமது சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

  இதை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. தமிழ்நாடு அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், பாபா அப்ரஜித் 2 ரன்னிலும் அவுட்டாகினர். 4-வது வீரராக களமிறங்கிய அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி தமிழ்நாடு அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார்.

  தமிழ்நாடு அணி இறுதியாக 18.4 ஒவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று மாலை நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பஞ்சாப் - பரோடா அணிகள் மோதிகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியுடன் மோதும்.
  Published by:Vijay R
  First published: