Home » News » Sports » CRICKET SYED MUSHTAQ ALI TROPHY SREESANTH BACK TO CRICKET VJR

அதே வேகம், சற்றும் குறையாத உத்வேகம்... மீண்டு(ம்) வந்த ஸ்ரீசாந்தின் முதல் விக்கெட் - வீடியோ

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடந்த 2013-வது நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கினார்.

அதே வேகம், சற்றும் குறையாத உத்வேகம்... மீண்டு(ம்) வந்த ஸ்ரீசாந்தின் முதல் விக்கெட் - வீடியோ
ஸ்ரீசாந்த் (கோப்பு படம்)
  • Share this:
சையது முஸ்தாக் அலி தொடரில் கேரள அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 7 ஆண்டுகள் தடைக்கு பின் மீண்டும் கிரிக்கெட்டில் பந்துவீசி தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி நீண்ட நாள் பசியை தணித்து கொண்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடந்த 2013-வது நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடிய ஸ்ரீசாந்த் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்ட புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பிசிசிஐ கிரிக்கெட் விளையாட ஸ்ரீசாந்த்க்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் செய்த மேல்முறையீட்டில் இந்த தடை நீக்கப்பட்டு அவர் கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் 7 ஆண்டுகள் தடையினால் விளையாடமால் இருந்த ஸ்ரீசாந்த் உள்நாட்டு டி20 தொடரான சையது முஸ்டாக் அலி கோப்பையில் கேரள அணியில் இடம்பெற்றார்.


சையது முஸ்டாக் அலி தொடரின் கேரளா - புதுச்சேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் பந்துவீசிய ஸ்ரீசாந்த் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். புதுச்சேரி அணி 26 ரன்கள் எடுத்திருந்த போது அந்த அணியின் தொடக்க வீரர் அஹமதை அவுட்டாக்கி தனது விக்கெட்டை வேட்டையை மீண்டும் தொடங்கினார் ஸ்ரீசாந்த்.



இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய புதுச்சேரி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரள அணி விளையாடி வருகிறது.
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading