ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த் ‘கார்டை’ அழித்து மாற்றிய ஆஸி வீரர் - சில்லரைத் தனமாக நடந்து கொண்டது ஸ்மித்தா? வார்னரா? வேடா?- ரசிகர்கள் கடும் விமர்சனம்

ரிஷப் பந்த் ‘கார்டை’ அழித்து மாற்றிய ஆஸி வீரர் - சில்லரைத் தனமாக நடந்து கொண்டது ஸ்மித்தா? வார்னரா? வேடா?- ரசிகர்கள் கடும் விமர்சனம்

ஆஸி. அணி மாறவேயில்லை, இன்னமும் ஏமாற்று வேலையை நிறுத்தவில்லை என்று ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ஆஸி. அணி மாறவேயில்லை, இன்னமும் ஏமாற்று வேலையை நிறுத்தவில்லை என்று ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ஆஸி. அணி மாறவேயில்லை, இன்னமும் ஏமாற்று வேலையை நிறுத்தவில்லை என்று ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஒரு பேட்ஸ்மெனுக்கு மிக மிக முக்கியம் அவர் எடுக்கும் ‘கார்டு’, அதாவது கிரீசில் எந்த ஸ்டம்புக்கு நேராக தன் பேட் இருக்க வேண்டும் தான் எங்கு நிற்க வேண்டும், எந்த பவுலருக்கு எப்படி ஸ்டான்ஸ் எடுத்தால், கார்டு எடுத்தால் சவுகரியம் என்பதெல்லாம் ஒரு பேட்ஸ்மெனின் பேட்டிங்கைத் தீர்மானிக்கிறது.

  சிட்னி டெஸ்ட் போட்டியில் 5ம் நாளான இன்று ரஹானே ஆட்டமிழந்தவுடன் இறங்கிய ரிஷப் பந்த், முதலில் 34 பந்துகளில் 5 ரன்கள் என்று நிதானம் காட்டி பிறகு வெகுண்டு எழுந்து சாத்து சாத்தென்று சாத்தி ஆஸ்திரேலியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து தோல்வி பயத்தை ஏற்படுத்தினார்.

  118 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 97 ரன்கள் என்று அசாத்திய தைரியத்துடனும், ஆஸ்திரேலிய பவுலிங் என்றால் என்ன பெரிய இதுவா? என்று புரட்டி எடுத்தார். இப்படி ஆடுபவர்களைக் கண்டால் ஆஸி.க்கு எப்பவுமே கதி கல்க்கம்தான், பென் ஸ்டோக்ஸ் போன்றோரைப் பார்த்து குலைநடுங்கக் காரணம் இதுதான்.

  இந்நிலையில் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற மனநிலையில் ஆடும் ஆஸ்திரேலியா சில்லரைத் தனமான வேலைகளில் ஈடுபடுவது காலங்காலமாக நடப்பதுதான், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பார்களே அதே போல் ரிஷப் பந்த் எடுத்த ‘கார்டை’ மாற்றி விட்டால் அவர் குழம்பிவிடுவாராம். இதுதான் அந்த சில்லரைத்தனமான செயலின் பின்னணியில் உள்ள மனநிலை.

  இதனால் குளிர்பான இடைவேளையின் போது யாரோ ஒரு வீரர் அது ஸ்மித்தா, மேத்யூ வேடா, வார்னரா என்று தெரியவில்லை, ரிஷப் பந்த் எடுத்த கார்டுக்கு அருகில் வேறு ஒரு கார்டை எடுத்து காலால் கோடு போட்டு விட்டுச் சென்றார். ரசிகர்கள் ஜெர்சியில் உள்ள எண் 49-ஐ பார்த்து அது ஸ்மித் என்று முடிவு கட்டி அவரை விளாசி வருகின்றனர்.

  இதுவும் கேமராவில் பதிவாகி விட்டது. ரிஷப் பந்த் மீண்டும் வந்தவர் கார்டு எடுக்க வேண்டியதாயிற்று. எதிரணி பேட் செய்யும் போது பீல்டிங் அணி வீரர் பேட்டிங் கிரீஸ் அருகே வந்து காலால் கண்ட அடையாளங்களையும் ஏற்படுத்துவது என்ன பழக்கம் என்று ரசிகர்கள் ஆஸி. அணி மாறவேயில்லை, இன்னமும் ஏமாற்று வேலையை நிறுத்தவில்லை என்று ட்விட்டர் பக்கங்களில் விளாசி வருகின்றனர்.

  இந்திய அணி 300/5 என்று போராடி வருகிறது அஸ்வின் சுவாராகி 24 ரன்களுடனும், விஹாரி கால் முடியாமல் 7 ரன்களுடனும் தைரியமாக ட்ரா செய்து விடலாம் என்று போராடி வருகின்றனர். இன்னும் இன்று 16 ஓவர்களே மீதமுள்ளன.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, Rishabh pant, Steve Smith, Sydney