27வது டெஸ்ட் சதம் விளாசிய ஸ்மித்: விராட் கோலியை சமன்; 2019 செப்.-க்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து நிரூபித்தார்

27வது டெஸ்ட் சதம் விளாசிய ஸ்மித்: விராட் கோலியை சமன்; 2019 செப்.-க்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து நிரூபித்தார்

சிட்னி டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் சதம். | படம்: ஐசிசி.

கடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில்  211 ரன்களை விளாசினார். அதன் பிறகு இப்போதுதான் டெஸ்ட் சதம். விராட் கோலியையும் சமன் செய்தார்.

 • Share this:
  சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டாப் பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் தனது 27வது டெஸ்ட் சதத்தை எடுத்து ஆடி வருகிறார்.

  இதன் மூலம் இந்திய டெஸ்ட் மாஸ்டர் விராட் கோலியை சத எண்ணிக்கையில் சமன் செய்தார்.

  கடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில்  211 ரன்களை விளாசினார். அதன் பிறகு இப்போதுதான் டெஸ்ட் சதம்.

  அதன் பிறகு நியூஸிலாந்துக்கு எதிராக மெல்போரில் 85 ரன்களையும் சிட்னியில் 63 ரன்களையும் எடுத்ததே ஸ்மித்தின் டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோர்களாக இருந்தது.

  ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 2 அதிரடி சதங்களை அடுத்தடுத்து அடித்தார்.

  ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெல்ட், மெல்போர்னில் அஸ்வினிடமும் பிறகு பும்ராவிடம் லெக் ஸ்டம்பையும் இழந்து இந்தத் தொடரில் அவர் பார்ம் அவுட். அவ்வளவுதான், என்று விமர்சகர்கள் கூறும் வண்ணம் ஆடிய நிலையில் சிட்னியின் மந்தமான பிட்ச் அவருக்குக் கைகொடுத்தது. மேலும் அஸ்வினை அவர் அடித்து ஆட முடிவெடுத்து ஆடினார்.

  மற்றவர்களை நிதானத்துடன் ஆடினார். ஆனால் 99 ரன்களில் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர் பதற்றத்தை இந்திய பவுலர்கள் அதிகரித்தனர். கடைசியில் 98வது ஓவரில் சைனி வீசிய பந்தை வழக்கம் போல் ஆஃப் சைடில் நகர்ந்து கொண்டு டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் தட்டி விட்டு 3 ரன்களை எடுத்து 201 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து சதத்தை நிறைவு செய்தார்.

  மட்டையை உயர்த்தி ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.

  முன்னதாக டிம் பெய்ன் 1 ரன்னில் பும்ராவின் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார். பாட்கமின்ஸ் ஜடேஜாவின் யார்க்கருக்கு பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.

  ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 104 ரன்களுடனும், ஸ்டார்க் 16 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

  இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: