Home » News » Sports » CRICKET SYDNEY TEST RISHAB PANT ATTACKS TO 73 NOT OUT PUJARA SOLID LEADS INDIAN FIGHT BACK MUT

ரிஷப் பந்த் காட்டடி; புஜாரா உறுதுணை; இந்தியா வெற்றி பெற 201 ரன்கள் தேவை- ஆஸி.க்கு தோல்வி பீதி

34 பந்துகளில் 5 என்று இருந்த ரிஷப் பந்த் அதன் பிறகு 63 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார், இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். போர்ட் ஆஃப் ஸ்பெயினுக்குப் பிறகு இந்திய அணி 406 ரன்கள் இலக்கை எதிர்த்து விறுவிறுப்பான முன்னேற்றம்.

ரிஷப் பந்த் காட்டடி; புஜாரா உறுதுணை; இந்தியா வெற்றி பெற 201 ரன்கள் தேவை- ஆஸி.க்கு தோல்வி பீதி
ஆஸி.க்கு பீதியூட்டும் ரிஷப் பந்த்.
  • Share this:
சிட்னி டெஸ்ட் போட்டியில் 406 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவரும் இந்திய அணி 5ம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

புஜாரா 147 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களுடனும், இன்றைய நாயகனான ரிஷப் பந்த் 97 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் என்று அதிரடியாக ஆடி வருகிறார். . உணவு இடைவேளை வரை 108 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. ரஹானே 4 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி உள்ளே திரும்பிய பந்து ரஹானேவின் மட்டை உள்விளிம்பில் பட்டு மேத்யூ வேடிடம் கேட்ச் ஆனது. மிகப்பெரிய விக்கெட் அது.


ஹனுமா விஹாரி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் தன்னம்பிக்கையுடன் ஆக்ரோஷ முடிவை எடுத்த ரஹானே, ரிஷப் பந்த்தை வரச்சொன்னார். ரிஷப் பந்த் தொடக்கத்தில் நிதானம் காட்டினார் 34 பந்துகளில் 5 ரன்களையே எடுத்திருந்தார். அதுவும் டிம் பெய்ன் அவருக்கு ஒரு சடுதியில் வந்த கேட்சை விட்டார்.

ஆனால் அதன் பிறகு ரிஷப் பந்த் வெளுத்துக் கட்டினார், நேதன் லயனை மேலேறி வந்து 3 சிக்சர்களை விளாசினார், ஒன்று லாங் ஆன், ஒன்று நேராக ஒன்று இன்சைட் அவுட் ஷாட்டில் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ் ஆனது, லயனை 3-4 பவுண்டரிகளையும் விளாசினார் ரிஷப் பந்த். இடையில் இன்னொரு கேட்சையும் விட்டார் டிம் பெய்ன்.

புஜாரா பவுண்டரி பந்துகளை ஆடாமல் விட்டாலும், தடுத்தாடினாலும், பீல்டர் கையில் அடித்தாலும் அவர் பங்கை சிறப்பாகச் செய்து வருகிறார். இருமுறை லயன் பந்தில் அவருக்கு எட்ஜ் எடுத்தது இருமுறையும் ஸ்லிப்புக்கு முன்னால் பந்து தரை தட்டியதால் தப்பினார்.ஜோஷ் ஹேசில்வுட், கமின்ஸ் அபாயகரமாக வீசி வருகின்றனர். ஸ்டார்க் பிரச்சினையில்லை ரிஷப் பந்த், புஜாரா இருவருமே இவரை நன்றாக ஆடுகின்றனர்.

34 பந்துகளில் 5 என்று இருந்த ரிஷப் பந்த் அதன் பிறகு 63 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார், இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்.

இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக 104 ரன்களைச் சேர்த்துள்ளனர். புதிய பந்து எடுப்பதற்கு இன்னமும் 10 ஓவர்கள் இருக்கின்றன.

புதிய பந்தில் கமின்ஸ், ஹேசில்வுட்டை எப்படி ஆடுகின்றனர் என்பதைப் பொறுத்து இந்திய வெற்றியோ, ஆஸ்திரேலிய வெற்றியோ தீர்மானிக்கப்படும்.
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading