யாரைப் பிடிக்கும் சச்சினா, விராட் கோலியா? - ஷுப்மன் கில்லை வம்புக்கு இழுத்த லபுஷேன்

யாரைப் பிடிக்கும் சச்சினா, விராட் கோலியா? - ஷுப்மன் கில்லை வம்புக்கு இழுத்த லபுஷேன்

லபுஷேன்

இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் 91 ரன்கள் அடித்து விட்டாரா, கேட்கவே வேண்டாம். அவர் வாய்பேசத் தொடங்கிவிட்டார், ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக ஆடாத போது வாய் பேச மாட்டார்கள்.

  • Share this:
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே இருதரப்பு வீரர்களும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்துக் கொள்வது வெகு சஜமான விஷயம். கடந்த முறை விராட் கோலியை டிம் பெய்ன் சீண்ட விராட் கோலி சரியான பதிலடி கொடுத்தது நாம் அறிந்ததே.

அதே போல் ரிஷப் பந்த் பின்னால் பேசிக்கொண்டே இருப்பார் என்பதால் மேத்யூ வேடுக்கும் அவருக்கும் கடந்த டெஸ்ட் போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது, “அந்தப் பையன் (பந்த்) என் பேட்டிங்கைப் பார்த்து சிரிக்கிறான், என் பேட்டிங் என்ன காமெடியாகவா இருக்கிறது” என்று வேட் பிற்பாடு ஊடகத்திடம் தெரிவித்ததும் செய்தியானது.

இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் 91 ரன்கள் அடித்து விட்டாரா, கேட்கவே வேண்டாம். அவர் வாய்பேசத் தொடங்கிவிட்டார், ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக ஆடாத போது வாய் பேச மாட்டார்கள், ஆனால் ஒரு அரைசதம் போதும் அவர்கள் வாயைத்திறந்து எதிரணி வீரர்களை தாறுமாறாக ஸ்லெட்ஜிங் செய்ய.

அதுவும் அங்கு சச்சின் டெண்டுல்கர் என்றால் ஒருவிதமான ஹீரோ ஒர்ஷிப்தான். ஆஸ்திரேலியாவில் சச்சினுக்கு ஏகப்பட்ட புகழ். அதே போல் விராட் கோலியும்தான்.

இதனைப் பயன்படுத்தி ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் பீல்டிங் செய்த லபுஷேன், ஆட்ட நடுவில் ஷுப்மன் கில், ரோஹித் கவனத்தை திசைத்திருப்பும் விதமாக அனாவசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

ஸ்டார்க் தன் 2வது ஓவரை வீசும் போது பந்து வீச்சுக்கு இடையே மார்னஸ் லபுஷேன், கில்லைப் பார்த்து, “உனக்குப் பிடித்த வீரர் யார்?” என்றார்.

கில் உடனே, “உணவு இடைவேளைக்குப் பிறகு கூறுகிறேன்” என்றார்.

ஆனால் லபுஷேன் ஓயவில்லை, ‘சச்சினா, கோலியா? யாரைப்பிடிக்கும்?’ என்றார். லபுஷேன்.

இதோடு விடாமல் ரோஹித் சர்மாவை நோக்கி, “குவாரண்டைனில் இருந்த போது என்ன செய்தாய்?” என்று கொரோனா குவாரண்டைனை நினைவு படுத்தினார்.

இந்திய அணியினர் பிரிஸ்பனி கடும் கொரோனா கெடுபிடிகளை எதிர்த்து வரும் நிலையிலும், ரோஹித், கில் உள்ளிட்ட வீரர்கள் விதிமுறைகளை மீறி உணவு விடுதி சென்று வந்ததும் சர்ச்சையாகியுள்ள நிலையில் மார்னஸ் லபுஷேன் எரிச்சல் ஏற்படுத்த வேண்டுமென்றே இருவரையும் தொந்தரவு செய்தார்.

ஆனால் இருவரும் சூழ்நிலையை நன்றாகக் கையாண்டனர்.
Published by:Muthukumar
First published: