லபுஷேன் ‘செஞ்சுரி’கனவை முறியடித்த ஜடேஜா, நங்கூரம் பாய்ச்சும் ஸ்மித்: 300க்குள் ஆஸி.யை சுருட்ட முயற்சி

லபுஷேன் ‘செஞ்சுரி’கனவை முறியடித்த ஜடேஜா, நங்கூரம் பாய்ச்சும் ஸ்மித்: 300க்குள் ஆஸி.யை சுருட்ட முயற்சி

ஜடேஜா

புதிய பந்தை எடுக்கும் வரை ஓவர்களை ஓட்டினால் போதும் என்ற அணுகுமுறையில் இந்திய பந்து வீச்சு அமைந்தது தவறானது.

 • Last Updated :
 • Share this:
  சிட்னி டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் உணவு இடைவேளையின் போது இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.

  வலுவாகச் சென்று கொண்டிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அஸ்வின் பந்தை பிரமாத ஸ்ட்ரெய்ட் டிரைவில் பவுண்டரிக்கு விரட்டி தொடரின் முதல் அரைசதத்தை எடுத்து உணவு இடைவேளையின் போது 76 ரன்களுடன் இருக்கிறார். இதில் 11 பவுண்டரிகள் அவர் விளாசியுள்ளார்.

  உயர பேட்ஸ்மென் கேமரூன் கிரீன் இறங்கி 21 பந்துகள் ஆடி ரன் எடுக்க முடியாமல் புதிய பந்தில் பும்ராவின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி. ஆகி டக் அவுட் ஆனார்.

  முன்னதாக 166/2 என்ற நிலையில் மார்னஸ் லபுஷேன் 67 ரன்களுடனும், ஸ்மித் 31 ரன்களுடனும் தொடங்கினர். இந்திய அணியின் பந்து வீச்சு லெக் திசையில் பீல்டர்களை நிறுத்தி பந்தை உள்ளே கொண்டு வந்து கொண்டிருந்தனர், அது பயனளிக்கவில்லை. புதிய பந்தை எடுக்கும் வரை ஓவர்களை ஓட்டினால் போதும் என்ற அணுகுமுறையில் இந்திய பந்து வீச்சு அமைந்தது தவறானது.

  இதனால் ஸ்மித், ;லபுஷேன் இருவரும் சரியாக 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். அப்போதுதான் ஆட்டத்தின் போக்குக்கு எதிராக 91 ரன்கள் எடுத்து சதக்கனவு கண்டு கொண்டிருந்த லபுஷேனை ஜடேஜா சற்றும் எதிர்பாராத வகையில் வீழ்த்தினார்.

  அதுவரை சிலி மிட் ஆஃப் நிறுத்தாததால் பின்னால் சென்று ஆஃப் திசையில் விளாசி வந்த லபுஷேன், திடீரென ரஹானே சில்லி மிட் ஆஃபைக் கொண்டு வர ஜடேஜா ஒரு பந்தை கிளாசிக் இடது கை ஸ்பின் ஆக்க, பின்னால் சென்று கவரில் அடிக்காமல் தேர்ட் மேனில் அடிக்கப் பார்த்து எட்ஜ் செய்தார், ரஹானே இதை எதிர்பார்த்து கேட்சை எடுத்தார். லபுஷேன் கடும் ஏமாற்றமடைந்தார்.

  மேத்யூ வேட் வந்தவுடனேயே ஆக்ரோஷம் காட்ட நினைத்தார். ஒரு நேர் ட்ரைவ் ஒரு ஸ்வீப் பவுண்டரி என்று அவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் தூக்கி வீசப்பட்ட பந்தை இறங்கி வந்து மிட் விக்கெட்டில் தூக்கி அடிக்கப் போய் கொடியேற்றினார், பும்ரா கேட்சை எடுத்தார்.

  ஸ்மித் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறார். டிம் பெய்ன் களமிறங்கவிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் வலுவான டெய்ல் எண்டர்களையும் சேர்த்து புதிய பந்தில் ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்கு மட்டுப்படுத்தினால் இந்தியா தன் முயற்சியில் வெற்றி கண்டதாகக் கொள்ளலாம்.

  பிட்ச் ஸ்லோவாக இருப்பதால் அஸ்வின் எடுபடவில்லை. ஸ்மித் அவரை அடித்து ஆட முடிவெடுத்து ஆடி வருகிறார். இந்நிலையில் ஜடேஜாவின் இரண்டு விக்கெட்டுகள் பெரிய பங்களிப்பாகும்.
  Published by:Muthukumar
  First published: