சிட்னி டெஸ்ட் : இந்திய பவுலர்கள் சறுக்கல்... ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

சிட்னி டெஸ்ட் : இந்திய பவுலர்கள் சறுக்கல்... ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

India vs Australia

 • Share this:
  இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 166 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.

  இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடமால் இருந்த வார்னர் அணிக்கு திரும்பியது அந்த அணிக்கு பலமாக இருந்தது. ஆனால் தொடக்க வீரராக இறங்கிய வார்னர் 5 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

  இதையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே உடன் மற்றொரு தொடக்க வீரரான வில் புகோவ்ஸ்கி இணைந்து நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியை அவுட்டாக்க இந்திய பவுலர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் வில் புகோவ்ஸ்கி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் அவுட்டானார்.

  ஆஸ்திரேலிய அணியின் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் இந்த டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடினார். அஸ்வினின் சுழல் சிட்னி மைதனாத்தில் இந்த முறை எடுபடவில்லை. இறுதியாக 55 ஒவர்கள் வீசிய நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.  முதல் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. மார்னஸ் 67 ரன்களுடனும் ஸ்மித் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: