முகப்பு /செய்தி /விளையாட்டு / சிட்னி டெஸ்ட்: அடைக்கப்பட்ட 2 புலிகள் உள்ளன.. கூண்டை திறக்கப் போகிறேன்- இங்கிலாந்து ‘அடேங்கப்பா!’

சிட்னி டெஸ்ட்: அடைக்கப்பட்ட 2 புலிகள் உள்ளன.. கூண்டை திறக்கப் போகிறேன்- இங்கிலாந்து ‘அடேங்கப்பா!’

ஸ்டூவர்ட் பிராட்

ஸ்டூவர்ட் பிராட்

68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 82 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 14 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி பேட்டிங் வரிசையில் மாற்றமில்லையாம், பவுலிங்கில் மாற்றம் வருகிறதாம்.

  • 1-MIN READ
  • Last Updated :

68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 82 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 14 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி பேட்டிங் வரிசையில் மாற்றமில்லையாம், பவுலிங்கில் மாற்றம் வருகிறதாம்.

அதுவும் கூண்டில் இருக்கும் 2 புலிகளாம். அதில் ஒன்று கிழட்டு புலி அல்ல எலியாகிப் போன ஸ்டூவர்ட் பிராட், இன்னொருவர் காலி பெருங்காய டப்பாவான பென் ஸ்டோக்ஸ். பிராட் மீண்டும் அணிக்குள் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு வந்து ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் உதவி பயிற்சியாளரும் முன்னாள் இடது கை பேட்டருமான கிரகாம் த்ரோப் கூறும்போது, “கூண்டில் அடைக்கப்பட்ட இரண்டு புலிகள் இந்த சிட்னி டெஸ்ட்டுக்கு வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய புலிகளைத்தான் குறிப்பிடுகிறேன்.

வீரர்களை சரியான மனநிலைக்குக் கொண்டு வரவேண்டும். வீரர்கள் அவர்களுக்காகவும் ஆடவேண்டும், அணிக்காகவும் ஆட வேண்டும். இதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர்.

சிட்னி டெஸ்ட்டுக்கான தயாரிப்பு கடினமாக இருக்கிறது. கோவிட் கவனச்சிதறல் உள்ளது. கோவிட் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் களத்தில் இருக்கும் போதும் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை என்பதும் உண்மை. சிட்னியில் நல்ல ஆட்டத்தை ஆடுவதற்கான பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ” என்றார்.

இங்கிலாந்து ஆஷஸ் தொடரை தோற்று விட்டது 3-0 என்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பதோடு, ஆஷஸ் கோப்பையையும் தக்க வைத்துள்ளது. சிட்னி டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் கோவிட் தனிமையில் இருப்பதால் கிரகாம் த்ரோப்தான் பயிற்சியாளராக அணியை வழி நடத்துகிறார்.

இதையும் படிங்க: இந்த பூமியின் பெரிய அணிகளுள் இந்திய அணியும் ஒன்றாம்- முன்னாள் ஆஸி. பவுலர் ‘டூ மச்’

இங்கிலாந்து அணி விவரம்: ஹசீப் ஹமீது , ஜாக் கிராலி, டேவிட் மலான், ஜோ ரூட் (captain), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், மார்க் உட், ஜாக் லீச், பிராட், ஜேம்ஸ் ஆண்டசன்.

First published:

Tags: Ashes 2021-22, Australia vs England