ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பத்துப் பத்து பாலா ஆடினா... ஆட்டத்தின்போது விஹாரியிடம் தமிழில் உரையாடிய அஸ்வின்

பத்துப் பத்து பாலா ஆடினா... ஆட்டத்தின்போது விஹாரியிடம் தமிழில் உரையாடிய அஸ்வின்

சாதனை ஜோடி அஸ்வின் - விஹாரி.

சாதனை ஜோடி அஸ்வின் - விஹாரி.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக கீழே நெட்டிசன்கள் இதற்கு என்ன அர்த்தம், யாராவது மொழிபெயருங்களேன் என்று பலவிதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சிட்னி டெஸ்ட் போட்டியில் தங்களது மாரத்தான் ஆட்டத்தினால் ட்ரா செய்தது இந்தியா, இதில் அஸ்வின், விஹாரி கூட்டணி 259 பந்துகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆஸி. தாக்குதலிலிருந்து மீண்டு ட்ரா செய்தனர்.

  உண்மையில் இன்று ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளது. டிம் பெய்ன் 3 கேட்ச்களை விட்டார், இருமுறை பந்த்துக்கு விட்டார், ஒன்று பந்த் 3 ரன்களில் இருந்த போது, மீண்டும் 56-ல் இருந்த போது விட்டார், பிறகு ஆட்டம் முடிய 10 ஒவர்கள் இருந்த போது ஹனுமா விஹாரிக்கு ஒரு கேட்சை விட்டார் பெய்ன்.

  பதிலி வீரர் சான் அபாட் அஸ்வினுக்குக் கையில் வந்த கேட்சை விட்டார். இதனால்தான் ஆஸி.க்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது என்று அவர்கள் கூறக்கூடும்.

  இதில் அஸ்வின் முன்னால் இறங்கினார் ஹனுமா விஹாரி தொடைத்தசைப்பிடிப்பினால் கால்களை நகர்த்த முடியவில்லை, ஆனாலும் உறுதியாக நின்றார், சில பல நெருக்கமான பந்துகள் அவர் மட்டையைக் கடந்து சென்ற பதற்றத்திலும் அவர் உறுதியுடன் நின்றார்.

  அஸ்வினும் அவரும் அவ்வப்போது நடுவில் உரையாடினர், இதில் ஓர் உரையாடலில் அஸ்வின் ஹனுமா விஹாரியிடம் தமிழில் கூறியது ஆங்கில வர்ணனக்கு இடையில் கேட்டது. இதில் அஸ்வின், விஹாரியிடம்.. “பத்து பத்து பாலா ஆடினா.. 40.... என்று கூறி ஆடு என்றார். இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

  அதாவது பத்து பத்து பாலா கொண்டு போனால் மீதி ஓவர்களை சமாளித்து விடலாம் ஆடு என்ற கருத்தில் அஸ்வின் கூறியதுதான் வைரலாகியுள்ளது. விஹாரி ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

  இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக கீழே நெட்டிசன்கள் இதற்கு என்ன அர்த்தம், யாராவது மொழிபெயருங்களேன் என்று பலவிதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, R Ashwin, Sydney