Home » News » Sports » CRICKET SYDNEY TEST ASHWIN GETS SMITH AGAIN GOT HIM BEFORE HIS EACH INNINGS CENTURY MUT

மீண்டும் ஸ்மித்தை வீழ்த்தினார் அஸ்வின்; 2-வது இன்னிங்சிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை முறியடித்தார்

ஸ்மித் 2வது இன்னிங்சிலும் சதம் எடுக்கும் உறுதியோடு சென்று கொண்டிருந்த போது அஸ்வின் எங்கிருந்தோ ஒரு விக்கெட்டை பெற்று கொடுத்தார்.

மீண்டும் ஸ்மித்தை வீழ்த்தினார் அஸ்வின்; 2-வது இன்னிங்சிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை முறியடித்தார்
மீண்டும் ஸ்மித்தை வீழ்த்திய அஸ்வின். | சிட்னி டெஸ்ட்.
  • Share this:
சிட்னி டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் ஆக்ரோஷமாகத் தொடங்கினார். ஆனால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

182/4 என்ற நிலையில் ஸ்மித் 58 ரன்களுடன் தொடங்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரை சிராஜ் வீசினார். கிரீன் சிங்கிள் எடுத்து ஸ்மித்திடம் ஸ்ட்ரைக் கொடுக்க, சிராஜ் லெக் ஸ்டம்பில் ஷார்ட் பிட்ச் வீச ஸ்மித் அதனை ஃபைன்லெக் திசையில் ஹூக் செய்தார் டாப் எட்ஜ் ஆனது, பந்து பவுண்டரியைத் தாண்டி சிக்ஸ் ஆனது.

அடுத்த பந்தே மீண்டும் அவரது கால்காப்பில் வீச அதுவும் பவுண்டரிக்கு பறந்தது, இம்மிறை நான்கு. பிறகு அஸ்வின் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார் ஸ்மித், சிராஜ் மீண்டும் லெக் திசையில் ஸ்மித்துக்குக் காட்ட பந்து பவுண்டரிக்குப் பறந்தது. ஆஸ்திரேலிய முன்னிலை 300 ரன்களைக் கடந்தது.


இந்நிலையில் படபடவென 81 ரன்களுக்கு உயர்ந்த ஸ்மித் தன் விக்கெட்டை அஸ்வினிடம் மீண்டும் இழந்தார். நன்றாக ஆஃப் ஸ்டம்பில் தூக்கி விசப்பட்ட பந்துக்கு ஸ்மித் தடுப்பு உத்தியைக் கையாண்டார். பந்து திரும்பி கால்காப்பைத் தாக்கியது. பெரிய முறையீட்டுக்கு நடுவர் நாட் அவுட் என்றார். ரஹானே, அஸ்வின் கூட்டணி ரிவியூ செய்ய முடிவெடுத்தது. பிரமாதமான ரிவியூவானது, மட்டையின் உள்விளிம்பில் படவில்லை, ஸ்டம்பை தாக்கும் பந்து என்பதால் 3ம் நடுவர் அவுட் கொடுத்தார்.

ஸ்மித் 2வது இன்னிங்சிலும் சதம் எடுக்கும் உறுதியோடு சென்று கொண்டிருந்த போது அஸ்வின் எங்கிருந்தோ ஒரு விக்கெட்டை பெற்று கொடுத்தார்.

167 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 81 ரன்களில் வெளியேறினார்.ஆஸ்திரேலியா தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெய்ன் 5 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மொத்த முன்னிலை 314 ரன்கள்.
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading