4 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்

India Lost 3 Wickets Within 4 Overs | கேப்டன் விராட் கோலி வெறும் 3 ரன்னில் வெளியேறினார். #AUSvIND #INDvAUS

Web Desk | cricketnext
Updated: January 12, 2019, 1:56 PM IST
4 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்
மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் தோனி. (Twitter)
Web Desk | cricketnext
Updated: January 12, 2019, 1:56 PM IST
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.12) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Finch, virat Kohli, ஆரோன் பிஞ்ச், விராட் கோலி.
டாஸ் போடும் கேப்ப்டன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி. (Cricket Australia)


ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், கவாஜா 59 ரன்களும், மார்ஸ் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Khawaja, கவாஜா
இந்திய அணியின் பந்துவீச்சை விளாசிய கவாஜா. (Cricket Australia)


இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை அடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.தொடக்க வீரர் தவான், முதல் ஓவரிலேயே எல்பிடபுள்யூ முறையில் டக் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி வெறும் 3 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர், ரோகித் சர்மா - தோனி ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் போகாமல் பார்த்துக்கொண்டது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களே எடுத்திருந்தது.

Also Watch...

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...