ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உலகின் நம்பர் ஓன் டி20 வீரர் சூர்யகுமார் யாதவ்?

முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உலகின் நம்பர் ஓன் டி20 வீரர் சூர்யகுமார் யாதவ்?

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்கதேச நாட்டுக்கு சுற்று பயணம் செய்யும் இந்திய அணி வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 உலக கோப்பஒ தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார் என ரவீந்திர ஜடேஜாவை வங்கதேச தொடருக்கு இந்திய அணிக்கு தேர்வானார்.

  இந்த நிலையில் ஜடேஜாவுக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்றும் இதனால் ஜடேஜா வங்க தேச தொடரில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால் ஜடேஜாவுக்கு பதிலாக இந்திய அணிக்கு யாரை தேர்தெடுக்கப்படுவார்கள் என ரசிகர்கள் குழம்பி இருந்தனர். இதனையடுத்து ஜடேஜாவுக்கு பதில் டி20 நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் டி20 போட்டிகளில் 890 புள்ளிகளுடன் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் தக்க வைத்துள்ளார். டி20 பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் சூர்யகுமார் யாதவை தவிர மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10க்குள் இடம்பெறவில்லை.

  இதையும் படிங்க: பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

  அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹாசரங்க தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரஷித் கான் இரண்டாவது இடத்திலும் அடில் ராஷித் மூன்றாவது இடத்தில் உள்ளானர். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

  டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச வீரர் ஷாகிப் ஆல் ஹாசன் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி இரண்டாவது இடத்திலும் இந்திய வீரர் ஹார்டிக் பாண்டிய மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

  Published by:Arunkumar A
  First published: