ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் - மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் - மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

  இந்திய அணியில் டி20 போட்டிகளில் தற்போது தவிர்க்க முடியாத நபராக விளக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.  டி20 போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறனை அவர் பெற்றுள்ளார். இதனால் இந்தியாவின் 360 டிகிரி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சூர்யாகுமார் யாதவ் இப்போழுது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி உள்ளார்.

  ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ள டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

  அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தவிர, டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற இந்திய வீரர் விராட் கோலி மட்டும் தான் (10-வது இடம்) . இதற்கிடையில், நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டி20 உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  இதையும் படிங்க:  டி20 கிரிக்கெட் உலக கோப்பை : ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்த விராட் கோலி

  ஐசிசி வெளியிட்டுள்ள டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியல்:

  1) சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 863 புள்ளிகள். 2) முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 842 புள்ளிகள். 3) டெவோன் கான்வே (நியூசிலாந்து)- 792 புள்ளிகள். 4) பாபர் ஆசம் (பாகிஸ்தான்)- 780 புள்ளிகள். 5) ஐடன் மார்க்ரம் (தென்ஆப்பிரிக்கா) - 767 புள்ளிகள். 6) டேவிட் மாலன் (இங்கிலாந்து)- 743 புள்ளிகள். 7) க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)- 703 புள்ளிகள். 8) ரெய்லி ரூஸோ (தென்ஆப்பிரிக்கா)- 689 புள்ளிகள். 9) ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா)- 687 புள்ளிகள். 10) விராட் கோலி (இந்தியா)- 638 புள்ளிகள்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: ICC Ranking, Suryakumar yadav, T20