நாளை (ஆகஸ்ட் 28ம்தேதி, ஞாயிறு) இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, போட்டியை விறுவிறுப்பூட்டும் வகையில் முன்னோட்ட தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுததியுள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் உண்மையில் பாகிஸ்தான் அஞ்சும், அஞ்சப்பட வேண்டிய வீரராக எழுச்சி பெற்றுள்ளார்.
அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டி20-யில் அந்த 200 ரன்களுக்கும் மேலான இலக்கை விரட்டிய போது உண்மையில் ஒரு ஏ.பி.டிவில்லியர்ஸ் போல்தான் சகல திசைகளிலும் திரும்பி 360 டிகிரி வீரராக ஆடி கிட்டத்தட்ட தனிமனிதனாக வெற்றி பெறச் செய்திருப்பார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது ஒருபக்கம் இருந்தாலும், இந்தப்போட்டியில் சூரியகுமார் யாதவ் சதம் அடித்தார். உண்மையில் டி20 கிரிக்கெட்டில் சமீபகாலங்களில் மறக்க முடியாத ஒரு இன்னிங்சாக இது அமைந்தது.
அதே போல் சூரியகுமார் யாதவ், எந்த ஒரு களவியூகத்திலும் அடிக்க வேண்டிய பகுதிகளை கண்டுப்பிடிப்பதில் சிறந்தவராக இருக்கிறார். கோலிக்குப் பிறகு கேப்பில் ஆடும் ஒரு வீரராக இருக்கிறார் சூரியகுமார். மேலும், ஆஃப் திசை, லெக் திசை இரண்டிலும் ஸ்கொயர் பொசிஷன்களில் சூரியகுமார் படு ஸ்ட்ராங். எங்கு போட்டாலும் அவரால் ஆஃப்திசையிலோ, லெக் திசையிலோ பாயிண்ட், தேர்ட்மேன், ஸ்கொயர் லெக், பைன் லெக் என்று ஆட முடிகிறது.
இதையும் வாசிக்க: ஆசியக் கோப்பை இன்று தொடக்கம்: இலங்கை -ஆப்கானிஸ்தான் 11 வீரர்கள் - முழு விவரம்
உதாரணமாக ஒரு முறை பாட் கமின்ஸ் வீச இவர் லெக் திசையில் நகர்ந்தார், பாட் கமின்சும் இவர் நகர நகர இவரது காலைக் குறிவைத்து பந்தை வீசினார், ஆனால் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸ் பறந்தது. வேகப்பந்து வீச்சு ஸ்பின் பந்து வீச்சு இரண்டுக்கும் எதிராகவும் திறமையாக ஆடுகிறார்.
அவரது டவுன் ஆர்டர் 4ம் நிலையே. அதை மாற்றி அவரை தொடக்கத்தில் இறக்கினால் எட்ஜ் ஆகி விடுவார், 4ம் நிலையில் இறங்கி அதாவது 8-9 ஓவர்களில் இறங்கி 20 ஓவர்கள் வரை நின்றால் இலக்கை நிர்ணயித்தாலும் விரட்டினாலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி என்பது உறுதி.
மொத்தமாக டி20-யில் 144.69 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். சர்வதேச டி20யில் 23 போட்டிகளில் 672 ரன்களை 175.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார், இது பாகிஸ்தானுக்கு மிக மிக அபாயகரமானது.
நாளை இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது, இதில் சூரியகுமார் யாதவ் மீது கடும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன, இதில் எதிரணியினர் அஞ்சும் வீரராக சூரியகுமார் யாதவ் சமீபகாலமாக எழுச்சி பெற்றுள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் உண்மையில் எதிரணிக்கு அச்சமூட்டுவதாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, Cricket