முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 போட்டிகளில் தோனி, ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்ய குமார் யாதவ்…

டி20 போட்டிகளில் தோனி, ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்ய குமார் யாதவ்…

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

டி20 போட்டிகளில் தோனி 98 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,617 ரன்களை எடுத்துள்ளார். ரெய்னா 78 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,605 ரன்களை சேர்த்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய ஆட்டக்காரராக சூர்ய குமார் யாதவ் மாறியுள்ளார். எப்போது களத்தில் இறங்கினாலும் எதிரணி பந்து வீச்சாளர்களை கலங்கடிக்கும் வகையில் சூர்ய குமார் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக விளையாடுகிறார். அந்த வகையில் டி20  ஃபார்மேட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை பெற்று, இந்திய அணிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

இதேபோன்று டி20க்கான கடந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற கவுரவத்தையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது.தனது அற்புதமான ஆட்டத்தால் ஒவ்வொரு சாதனையையாக சூர்ய குமார் முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்ய குமார் யாதவ் 34 பந்துகளில் 47 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி 98 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,617 ரன்களை எடுத்துள்ளார். இதேபோன்று ரெய்னா 78 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,605 ரன்களை சேர்த்துள்ளார். இந்த இருவரையும் பின்னுக்கு தள்ளி சூர்ய குமார் யாதவ் வெறும் 44 இன்னிங்ஸ்களில் 1,625 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த டாப் 5 பேரில், 5 ஆவது இடத்தை சூர்ய குமார் பிடித்திருக்கிறார்.

Also Read: சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி 4,008 ரன்களும், ரோஹித் சர்மா 3,853 ரன்களும், கே.எல்.ராகுல் 2,265 ரன்களும், ஷிகர் தவான் 1,759 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 1,625 ரன்களும் எடுத்துள்ளனர். இதற்கிடையே நியூசிலாந்து அணிக்கு  எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 2 ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி நாளை லக்னோவில் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket, Dhoni, Raina, Suryakumar yadav, Tamil News