ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆட்டநாயகன் விருது எனக்கே ஆச்சர்யம்.. சூர்யகுமார் யாதவ் தான் தகுதி - கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்

ஆட்டநாயகன் விருது எனக்கே ஆச்சர்யம்.. சூர்யகுமார் யாதவ் தான் தகுதி - கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்

கே.எல்.ராகுல் - சூர்ய குமார் யாதவ்

கே.எல்.ராகுல் - சூர்ய குமார் யாதவ்

”நான் மிடில் ஆர்டரில் விளையாடி இருக்கிறேன். அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆட்ட நாயகன் விருதை சூரிய குமார் யாதவிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.  இந்தப்போட்டியில் டேவிட் மில்லர் சதம் அடித்து மிரட்டினாலும் அது தென்னாப்பிரிக்கா ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இருந்தது போட்டியின் முடிவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆட்ட நாயகன் விருது இந்திய வீரர் கே.எல்.ராகுல் வசம் வந்தது.

  ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கே ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து பேசிய கே.எல்.ராகுல், “முதல் இரண்டு போட்டியிலும் இருவேறு விதமான ஆட்டத்தை ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு ஓப்பனராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விளையாடுவது முக்கியம். அந்த மனநிலையில் தான் நீங்கள் விளையாட வேண்டும். அப்படி தான் நான் இன்றும் விளையாடினேன், இனியும் ஆடுவேன். எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் ஆட உங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

  Also Read : இந்திய - தெ.ஆப்பிரிக்கா போட்டியில் மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பு.. 

  மேலும், “180-185 நல்ல ஸ்கோரா இருக்கும் என நினைத்தோம். ஆனால் ஆட்டத்தில் எங்களுக்கே நிறைய ஆச்சரியங்கள் இருந்தது. எனக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்து எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இது சூர்யகுமார் யாதவிற்கு கொடுத்திருக்க வேண்டும். நான் மிடில் ஆர்டரில் விளையாடி இருக்கிறேன். அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். தினேஷ் கார்த்திக்கிற்கு அதிகமான பந்துகள் கிடைப்பதில்லை. ஆனால் அவர் சிறப்பாக விளையாடினார். சூர்யா மற்றும் விராட் கோலியும் அற்புதமாக விளையாடினர்” என கூறினார்.

  மேலும் அவர் அடித்த முதல் பவுண்டரியை பற்றி கேட்ட போது, “அந்த முதல் பந்து தான் நான் இன்று நன்றாக விளையாடியதற்கு காரணமாக இருந்தது. களத்தில் நான் ஆடும் போது என்னுடைய நிலை சரியாக இருக்கிறது என்று நம்பிக்கை இருந்தது. ரசிகர்கள் தான் இந்திய அணியை உற்சாகபடுத்துகிறார்கள். மைதானம் முழுவதும் ரசிகர்களை வைத்து விளையாடி சில காலம் ஆகிறது. திரும்பவும் இப்படி விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cricket, India vs South Africa, Indian cricket team, Kl rahul