விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு சூர்ய குமார் யாதவ் ரீப்ளே செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் சூர்யகுமாரின் க்யூட் ரியாக்ஷன் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் 51 பந்துகளில் 115 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இலங்கை 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சூர்ய குமார், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதையடுத்து சூர்ய குமாரை இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரது பேட்டிங்கை பாராட்டி, விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். இதற்கு சூர்யகுமார் ரீப்ளே செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இவற்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி பதிவிட்ட ஸ்டோரியில் 2 ஃபையர் எமோஜிக்களும், 2 அப்ளாஸ் எமோஜிக்களும் இடம்பெற்றதுடன், சூர்யாவின் புகைப்படமும் இருந்தது. இதற்கு ரீப்ளே செய்த சூர்ய குமார், ‘இங்க பாருங்க… யாரு ஸ்டோரி வச்சுருக்காங்கன்னு…’ என்று கூறியுள்ளார். இன்னொரு ரீப்ளேயில், ‘ப்ரதர், உங்கள் மீது அளவற்ற அன்பு உள்ளது. விரைவில் உங்களை சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Raw emotions 🎦
A Suryakumar fandom frenzy 👏🏻
A special reply to an Instagram story 😉
Unparalleled love for SKY from his fans as he signs off from Rajkot 🤗#TeamIndia | #INDvSL | @surya_14kumar pic.twitter.com/wYuRKMNv1L
— BCCI (@BCCI) January 8, 2023
தற்போது ட்விட்டரில் இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. நாளை மறுதினம் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது.
சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்த தென்னாப்பிரிக்க அணி… தொடரை வென்றது ஆஸ்திரேலியா
ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Suryakumar yadav