ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2022ல் 1000 ரன்கள்.. சாதனை மேல் சாதனை.. பந்துகளை பறக்கவிடும் சூர்யகுமார் யாதவ்.!

2022ல் 1000 ரன்கள்.. சாதனை மேல் சாதனை.. பந்துகளை பறக்கவிடும் சூர்யகுமார் யாதவ்.!

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்த டி20 உலகக் கோப்பையில் 225 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 போட்டிகள் இந்தாண்டில் ஆயிரம் ரன்கள் கடந்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

  இந்திய அணியில் டி20 போட்டிகளில் தற்போது தவிர்க்க முடியாத நபராக விளக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ். டி20 போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறனை அவர் பெற்றுள்ளார். இதனால் இந்தியாவின் 360 டிகிரி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சூர்யாகுமார் யாதவ் இப்போழுது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி உள்ளார்.

  குறிப்பாக இந்த டி20 உலகக்கோப்பையில் சூர்யாகுமாய் யாதவ் பல இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை தூக்கி நிறுத்தி அதில் வெற்றி காண வைத்த பெருமையும் அவரை சேரும். களத்திற்கு வந்தலே முதலே அடித்து ஆடும் திறமை கொண்ட சூர்யகுமார் யாதவ், இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே பவுலர்கள் வீசிய சிறந்த பந்துகளையும் தனது வித்தியாசமான ஷாட்டுகளின் மிரளவைத்தார்.

  இதையும் படிங்க:  என்னதான் ஆச்சு? ரோகித் முதல் பாபர் வரை.. டி20ல் சொதப்பும் அணியின் கேப்டன்கள்!

   

  இந்த நிலையில் 2022ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் சூர்யகுமார் யாதவ். இந்த டி20 உலக கோப்பையில் 225 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறார். ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

  இந்த சாதனையை படைத்த 2வது சர்வதேச வீரர் சூர்யகுமார் யாதவ்.இந்தாண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுல்ள சூர்யகுமார் யாதவ் 28 இன்னிங்ஸில் 1026 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் ரிஸ்வான், ஒரு ஆண்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 2021ம் ஆண்டில் ரிஸ்வான் 26 இன்னிங்ஸில் 1326 ரன்களை குவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Suryakumar yadav, T20 World Cup