ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சூர்ய குமார் யாதவ்

குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

இவர் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடக்க இவர் 31 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் சூர்ய குமார் யாதவ்.

  தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் 61 ரன்கள் அடித்தபின் இவர் ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் குறைந்த பந்துகளில் (574 பந்துகளில்) 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் சூர்ய குமார் யாதவ் முதலிடத்தை பிடித்தார்.

  இந்த பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் கிளன் மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். நியூஸிலாந்து வீரர் கொலின் மன்ரோ 635 பந்துகளில் 1000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார். மேற்கு இந்திய வீரர் எவின் லூயிஸ் 640 பந்துகளிலும், இலங்கை வீரர் திசேரா பெரேரா 654 பந்துகளிலும் 1000 ரன்களை கடந்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

  Also Read : ஆட்ட நாயகன் விருதை சூரிய குமார் யாதவிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் - கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்

  சூர்யகுமார் யாதவின் இந்த ஃபாம் குறித்து ரோஹித் ஷர்மா விளையாட்டாக “நாங்கள் சூர்ய குமார் யாதவை நேரடியாக பாகிஸ்தானுடன் நடக்கவிருக்கும் டி20 உலககோப்பை போட்டியில் களமிறக்க உள்ளோம்” என கூறினார்.

  இவர் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடக்க இவர் 31 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டார். குறைந்த இன்னின்ஸில் 1000 ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலி (27 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், கே.எல்.ராகுல் (29 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cricket, Indian cricket team, T20, Virat Kohli