ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இது கனவா இல்லை நிஜமா!’ – துணை கேப்டன் பதவியால் சூர்ய குமார் வியப்பு

‘இது கனவா இல்லை நிஜமா!’ – துணை கேப்டன் பதவியால் சூர்ய குமார் வியப்பு

42 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் 1,408 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 180.77

42 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் 1,408 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 180.77

42 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் 1,408 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 180.77

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர் இது கனவா இல்லை நிஜமா என ஆச்சர்யம் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, தலா மூன்று டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

இதற்கான, இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதில், காயத்தில் இருந்து மீண்டு வரும் ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் டி-20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தவுள்ளார். மேலும், முன்னணி வீரர் விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான அணியில் இருந்து ரிஷப் பந்த் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.

டி-20 தொடரை பொருத்தவரை இஷான் கிஷண், ரிதுராஜ், ஷுப்மன் கில், சூர்யகுமார், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் அங்கம் வகிக்கின்றனர்.இவர்களுடன், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். மேலும், யுஸ்வேந்தர் சஹல், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார் ஆகிய 16 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த தொடரில் துணை கேப்டன் பொறுப்பு முதன்முறையாக சூர்யகுமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘துணை கேப்டன் பொறுப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது கனவா இல்லை நிஜமா என்கிற வியப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பட்டியலை எனது தந்தைதான் எனக்கு அனுப்பினார். அவர் எப்போதும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருப்பார்.

அவருடன் அணி குறித்து பேசினேன். அவர் என்னிடம், எதையும் நெருக்கடியாக எடுத்துக் கொள்ளாதே, உனது பேட்டிங்கை அனுபவித்து ஆடு என்று அறிவுரை கூறினார்.’ என்று சூர்யகுமார் தெரிவித்தார்.

2021 மார்ச் 14ஆம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சூர்யகுமார் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 42 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,408 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 180.77 ஆக உள்ளது. இதில் 12 அரைச் சதங்களும், 2 சதமும் அடங்கும்.

First published:

Tags: Cricket, Suryakumar yadav