47 பந்துகளில் 120 ரன்கள்: சச்சின் மகன் அர்ஜுன் ஓவரில் விளாசல்- இந்திய அணிக் கதவைத் தட்டும் சூரியகுமார் யாதவ்

47 பந்துகளில் 120 ரன்கள்: சச்சின் மகன் அர்ஜுன் ஓவரில் விளாசல்- இந்திய அணிக் கதவைத் தட்டும் சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பிரமாதமாக ஆடி இந்திய அணியில் தேர்வாகி விடுவோம் என்ற அவரது நம்பிக்கையில் மண் விழ அவர் நேரடியாகவே கோலிக்கு அறிவுறுத்துமாறு ஐபிஎல் போட்டியில் சில செய்கைகளைச் செய்தது அப்போது பரபரப்பானது நினைவிருக்கலாம்.

  • Share this:

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டுத் தொடருக்காக மும்பை அணி பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஜனவரி 10ம் தேதி முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பஞ்சாப் தமிழகம், கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 38 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடருக்கான தயாரிப்பாக மும்பை அணி தங்கள் அணிக்குள்ளேயே பயிற்சி டி20 போட்டியை நடத்தியது. இதில் சூரிய குமார் யாதவ் தலைமை மும்பை ‘பி’ அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமை மும்பை டி அணிகள் பயிற்சி டி20-யில் ஆடின.

இதில் முதலில் பேட் செய்த சூரியகுமார் யாதவ் தலைமை மும்பை அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது. இதில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரி உட்பட சூரியகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ரன்களை விளாசித்தள்ளினார்.

இந்த இன்னிங்ஸின் சிறப்பு என்னவெனில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 13வது ஓவரில் 3 பவுண்டரி ஒருசிக்சர் உட்பட 21 ரன்களை விளாசினார் சூரியகுமார் யாதவ்.

இலக்கை விரட்டிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணி பிரமாதமாக விரட்டி 202 ரன்கள் வரை வந்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் 16 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார், இந்திய அணியில் தேர்வாவோம் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.
Published by:Muthukumar
First published: