ஒரு நாள் போட்டிகளில் இந்த வீரர்களை தேர்வு செய்யாதது வியப்பாக உள்ளது - கங்குலி

Vijay R | news18
Updated: July 24, 2019, 2:36 PM IST
ஒரு நாள் போட்டிகளில் இந்த வீரர்களை தேர்வு செய்யாதது வியப்பாக உள்ளது - கங்குலி
சவுரவ் கங்குலி
Vijay R | news18
Updated: July 24, 2019, 2:36 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் சுப்மான் கில், ரஹானே தேர்வு செய்யப்படாதது வியப்பாக உள்ளதாக சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் சாம்பயின்ஷிப் தொடருக்கான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அனைத்துவிதமான போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இளம் வீரர் சுப்மான் கில் மற்றும் அனுபவ வீரர் ரஹானே தேர்வு செய்யப்படாதது வியப்பாக உள்ளது என சவுரவ் கங்குலி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.




Loading...



சுப்மான் கில் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் 'ஏ'அணிக்கும் இந்திய 'ஏ' அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.

சுப்மான் கில்


இதில் இந்திய 'ஏ' 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் விளையாடிய சுப்மான் கில் 218 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சுப்மான் கில் கட்டாயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

“இந்திய அணியில் தேர்வாகாதது எனக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் மூத்த வீரர்களுடன் நான் விளையாடுவேன் என்று எதிர்பார்த்தேன். அணியின் தேர்வாளர்களை கவரும் விதத்தில் தொடர்ந்து ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன்“ என சுப்மான் கில் தெரிவித்திருந்தார்.

Also Read : டெஸ்ட் போட்டிகளில் அதிரடி மாற்றம்! புதிதாக ஜொலிக்க உள்ள வீரர்கள்

Also Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

Also Read : ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி!


Also Watch

First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...