கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை சச்சின் அடித்துள்ளார். இதேபோன்று சர்வதேச போட்டிகளில் அவர் 34357 ரன்களை எடுத்துள்ளார். இவ்விரு சாதனைகளை பெரும்பாலும் முறியடிக்க முடியாத நிலையே தற்போது காணப்படுகிறது.
இந்நிலையில் சச்சினின் சொந்த ஊரான முமபை வான்கிடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் சிலை நிறுவப்படவுள்ளதாக தகவல்ள் வெளிவந்துள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 49 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் தனது 50 ஆவது பிறந்த நாளை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடவுள்ளார். அன்றைக்குள் சிலை பணிகளை முடித்து விட்டு சச்சின் பிறந்த நாளையொட்டி அவரது சிலை திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் சிலை பணிகள் நிறைவு பெறாவிட்டால் உலகக்கோப்பை தொடரையொட்டி சச்சினின் சிலையை திறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket