“தோனியின் பேட்டை பெருந்தன்மையாக தொட்டுக் கும்பிட்ட சுரேஷ் ரெய்னா“ குவியும் பாராட்டு - வீடியோ

“தோனியின் பேட்டை பெருந்தன்மையாக தொட்டுக் கும்பிட்ட சுரேஷ் ரெய்னா“ குவியும் பாராட்டு - வீடியோ
  • Share this:
ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சி.எஸ்.கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஐ.பி.எல் தொடர் வரும் 29ம் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை - சென்னை அணிகள் மோத உள்ளன. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனி, ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கினார்.

மகேந்திர சிங் தோனியுடன் சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஹர்பஜன் உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலைப்பயிற்சியின் போது தோனி தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலானது.


தற்போது தோனியின் பேட் மீது தவறுதலாக கால்பட்டதால் சுரேஷ் ரெய்னா அதனை தொட்டுக் கும்பிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பயிற்சி ஆட்டத்தின் நடுவே இருவரும் கலந்து ஆலோசிக்கின்றனர். அப்போது ரெய்னாவின் கால் தவறுதலாக தோனியின் பேட் மீது பட்டுவிடுகிறது. எதர்ச்சையாக நடந்துதான் என்பதால் தோனி எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லை். ஆனால் ரெய்னா பெருந்தன்மையுடன் அந்த பேட்டை தொட்டு கும்பிடுகிறார்.சுரேஷ் ரெய்னாவில் இந்த செயலை ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading