முகப்பு /செய்தி /விளையாட்டு / சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச்.. இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச்.. இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

ரெய்னா கேட்ச்

ரெய்னா கேட்ச்

சுரேஷ் ரெய்னா ஒரு அற்புதமான ஃபீல்டர். இந்திய அணியில் இருக்கும் போதும், சி.எஸ்.கே அணியில் இருக்கும் போதும் பல அற்புதமான கேட்ச்களை இவர் பிடித்திருக்கிறார்.

  • Last Updated :
  • Raipur, India

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்த தொடருக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் விளையாட அழைத்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பென் டன்க் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். அபிமன்யு மிதுன் வீசிய 16 ஓவரில் பென் டன்க் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயன்றார். அப்போது பாய்ண்டில் நின்றிருந்த சுரேஷ் ரெய்னா அதை அற்புதமாக பிடித்தார். அந்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க : ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா

சுரேஷ் ரெய்னா ஒரு அற்புதமான ஃபீல்டர். இந்திய அணியில் இருக்கும் போதும், சி.எஸ்.கே அணியில் இருக்கும் போதும் பல அற்புதமான கேட்ச்களை இவர் பிடித்திருக்கிறார். இவர் இந்த மாத தொடக்கத்தில் தான் அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த போட்டி நேற்றைய நிலையிலிருந்தே இன்று (செப்டம்பர் 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket, Sachin tendulkar, Suresh Raina