• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ”2011 உலகக்கோப்பையில் உங்களின் ஊக்கம் மிகுந்த பங்கை மறக்கமுடியாது” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த பிரதமரின் கடிதம்

”2011 உலகக்கோப்பையில் உங்களின் ஊக்கம் மிகுந்த பங்கை மறக்கமுடியாது” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த பிரதமரின் கடிதம்

ரெய்னா - மோடி

ரெய்னா - மோடி

2011 உலகக்கோப்பை போட்டியில் அவரது பங்கினை மறக்கமுடியாது என்றும், மிக இளையவர், துடிப்பானவர் என்றும் பாராட்டியிருக்கிறார் பிரதமர் மோடி

  • Share this:
    2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உங்களின் ஊக்கம் மிகுந்த பங்கை மறக்கமுடியாது என சுரேஷ் ரெய்னாவுக்கு, பிரதமர் மோடி எழுதிய தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி சுரேஷ் ரெய்னாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2011 உலகக்கோப்பை போட்டியில் அவரது பங்கினை மறக்கமுடியாது என்றும், மிக இளையவர், துடிப்பானவர் என்றும் பாராட்டியிருக்கிறார்.

     

    பிரதமர் மோடியின் கடிதத்தைப் பகிர்ந்து டிவிட்டரில் பதிலளித்திருக்கும் சுரேஷ் ரெய்னா, “விளையாடும்போது, தேசத்துக்காக வியர்வையையும், ரத்தத்தையும் தருகிறோம். மக்களின் அன்பையும், பிரதமரின் அன்பையும் விட பெரியது ஒன்றுமில்லை. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டிருக்கிறார்.

    சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கும் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக 2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: