முகப்பு /செய்தி /விளையாட்டு / ஓய்வு அறிவிப்புக்கு பிறகு நானும், தோனியும் கட்டிப்பிடித்து, நீண்ட நேரம் அழுதோம் - சுரேஷ் ரெய்னா

ஓய்வு அறிவிப்புக்கு பிறகு நானும், தோனியும் கட்டிப்பிடித்து, நீண்ட நேரம் அழுதோம் - சுரேஷ் ரெய்னா

தோனி - சுரேஷ் ரெய்னா

தோனி - சுரேஷ் ரெய்னா

ஓய்வை அறிவித்த பிறகு தோனியை கட்டிப்பிடித்து, இருவரும் நீண்ட நேரம் அழுததாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு தோனியை கட்டிப்பிடித்து, இருவரும் நீண்ட நேரம் அழுததாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இந்த மாதம் சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் அறிவிப்பு முடிந்த சில நிமிடங்களில், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மூலம் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனி ஓய்வை அறிவிக்க இருப்பதை அவர் அறிவிப்பதற்கு முன்பாகவே அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். ஓய்வை அறிவித்த பிறகு நானும் தோனியும் நீண்ட நேரம் கட்டியணைத்து அழுதோம். பியுஷ், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ன் சாட் ஆகியோர் எங்களின் கிரிக்கெட் வாழ்வைக் குறித்து அன்று இரவு பேசிக்கொண்டிருந்தோம்” என்று க்ரிக் ட்ராக்கர் இணையதளத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

தோனி, ரெய்னா அறிவிப்பைத் தொடர்ந்து பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவர்களின் பங்களிப்பை பாராட்டியும், நல் அபிமானங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket, MS Dhoni, Retirement, Suresh Raina