நான் ஒரு பிராமின் என்று கூறிய சுரேஷ் ரெய்னா- சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்

சுரேஷ் ரெய்னா

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணனை மேற்கொண்ட சுரேஷ் ரெய்னா ‘நான் ஒரு பிராமின்’ என்று கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

 • Share this:
  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணனை மேற்கொண்ட சுரேஷ் ரெய்னா ‘நான் ஒரு பிராமின்’ என்று கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

  மேலும் சென்னை கலாச்சாரத்தையே அவர் பிராமண அடையாளத்துடன் கொண்டு சேர்த்தார் என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  வர்ணனையில் இருந்த ரெய்னாவிடம் அவர் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் ஆடியதால் சென்னையுடனான உங்கள் தொடர்பு என்ன என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் “ஆம், நானும் பிராமின் தான் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் ஆடிவருகிறேன். எனக்கு இந்த கலாச்சாரம் பிடித்துள்ளது. என் அணி சக வீரர்களை நேசிக்கிறேன்.

  நான் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் ஆடியுள்ளேன், பத்ரிநாத், எல்.பாலாஜியுடன் ஆடியிருக்கிறேன். சிஎஸ்கேவில் நல்ல நிர்வாகம் உள்ளது. நாங்கள் எங்களைக் கண்டுப்பிடித்துக் கொள்ள நிறைய உரிமை உள்ளது. நல்ல கலாச்சாரம், அதை நேசிக்கிறேன். சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருப்பது என் அதிர்ஷ்டம் ” என்றார்.

  நான் ஒரு பிராமின் என்றும், சென்னை கலாச்சாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் அடையாளப்படுத்தியும் அவர் பேசியதாக சமூக ஊடகங்களில் ரெய்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  இது தொடர்பான சில நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் இதோ:  பொதுவாக சுரேஷ் ரெய்னாவை சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும் தோனி தல என்றால் ரெய்னா சின்ன தல என்றே செல்லமாக அழைக்கப்படுவார், ஆனால் இப்போது அவர் நான் ஒரு பிராமின் என்று கூறியதையடுத்து அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர், எதற்கு இந்த சாதிக்குறிப்பீடு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: