தோனி ஜெர்சி நம்பர் 7, என் ஜெர்சி நம்பர் 3... ஆகஸ்ட் 15 ஓய்வு அறிவிக்க என்ன காரணம்? ரெய்னா சுவாரஸ்ய தகவல்

தோனி - ரெய்னா

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவித்த சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்றும் கூறியுள்ளார்.

 • Share this:
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

  தோனி, ரெய்னா இருவரும் ஒரே நாளில் ஓய்வு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. தோனி, ரெய்னாவின் முடிவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலங்கள் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு வாழ்த்து தெரிவித்தும் அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

  Also Read : 1929 - தோனி குறிப்பிட்ட இந்த நேரத்தில் ஓய்வு பெற என்ன காரணம்?

  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து ரெய்னா சில சுவராஸ்ய தகவலை பகிர்ந்து உள்ளார். அதில், “தோனி ஓய்வை அறிவிக்க இருப்பதை  முன்பாகவே அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். தோனியின் ஜெர்சி நம்பர் 7, என்னுடைய ஜெர்சி நம்பர் 3, இரண்டும் சேர்ந்தால் 73. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா தனது 73-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்தது. இதனால் அன்றே ஓய்வை அறிவிப்பது சிறந்த தருணமாக இருந்தது“ என்றார்.

  மேலும் நானும் தோனியும் ஓய்வு அறிவித்த பின் ண்ட நேரம் கட்டியணைத்து அழுதோம். பியுஷ், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ன் சாட் ஆகியோர் எங்களின் கிரிக்கெட் வாழ்வைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவு பார்ட்டியும் கொண்டாடினோம்“ என்று ரெய்னா தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: