ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

மாதிரி படம்

மாதிரி படம்

உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி நம்பரை சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்ட பதிவுக்கு முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி எண்ணை சொல்லுங்கள் என பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சின்ன தல  சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் உலகம் முழுவது கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அணியாக திகழ்ந்து வருகிறது.

  சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிக்க தவம் கிடந்து வருகின்றனர். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி எப்போதும் வைத்திருக்கும். எந்த ஒரு வீரரும் சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் வீரர்கள் வரை அவர்கள் சாதனை படைத்தால் அதனை சென்னை அணி அங்கிகரித்து பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும்.

  இப்படி சமூகவலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சென்னை அணி தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்ட கேள்விக்கு முன்னாள் சென்னை அணி வீரரும் சின்ன தல என அன்பாக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அட்டகாசமான அளித்துள்ள பதில் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

  இதையு படிங்க: சமம் என்றாலும் சமம் இல்லை... இந்திய கிரிக்கெட்டில் ஆடவர், மகளிர் இடையே நிலவும் ஊதிய பேதம்

  உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி நம்பரை சொல்லுங்கள் என சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில்  ரசிகர்களிடம் கேட்டது. அதற்கு தங்களது பிடித்த வீரர்களின் ஜெர்ஸி நம்பரை  ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை பற்றி கேட்டதற்கு 90ஸ் கிட்ஸ்களின் எமோசன் என அட்டகாசமான பதிலை பதிவிட்டது.

  இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தோனியின் 7ஆம் நம்பரையும் , அவரின் 3ஆம் நம்பரையும் ஜடேஜாவின் 8ஆம் நம்பர் தான் தனது பிடித்தது என சென்னை அணியின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். ரெய்னாவின் இந்த பதில் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  சுரேஷ் ரெய்னா அளித்த அந்த பதிலையும் சென்னை அணி நிர்வாகம்   டிவிட்டரில் ரீ-ட்விட் செய்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai Super Kings, MS Dhoni, Suresh Raina