சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் மரணமா? வெளியானது உண்மை நிலவரம்!

#SureshRaina Dead? Indian cricketer slams death reports | ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார்.

சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் மரணமா? வெளியானது உண்மை நிலவரம்!
#SureshRaina Dead? Indian cricketer slams death reports | ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார்.
  • News18
  • Last Updated: February 12, 2019, 7:04 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வந்தநிலையில், தற்போது உண்மையான நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ‘சின்ன தல’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

Suresh Raina, சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா. (BCCI)தற்போது, மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சுரேஷ் ரெய்னா, சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டதாக காட்டுத்தீ போல செய்தி ஒன்று பரவியது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், இந்தச் செய்திகளின் உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. தான் மரணம் அடைந்துவிட்டதாக வெளியான செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ரெய்னா கடும் கோபம் அடைந்தார்.

Suresh Raina, சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா. (Twitter)
இதுகுறித்து அவர் ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக நான் சாலை விபத்தில் சிக்கியதாக வெளியான வதந்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த வதந்தி என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாராத்தை ஆழமாக பாதித்துள்ளது.

அத்தகைய செய்திகளை புறக்கணிக்கவும்; கடவுளின் ஆசியுடன் நான் நலமுடன் இருக்கிறேன். தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்விட்டர் பதிவுக்குப் பின்னரே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Video: ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் கோபமடைந்த மேத்யூ ஹெய்டன்!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading