திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து

காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய FEEDBACK CALL தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து
சுரேஷ் ரெய்னா - எஸ்.பி விஜயகுமார்
  • Share this:
திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்குதலுக்கு மத்தியிலும் திருப்பத்தூரில் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய FEEDBACK CALL தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கூறுகையில்,“காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு முறையாக புகார் ஏற்கப்பட்டதா? அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று அவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

புகார் அளித்தவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் குடிமக்கள் மீதான போலீசாரின் பொறுப்பும், அக்கறையும் அதிகாரிக்கும்“ என்றுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாரின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டுகள் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டரில், “திருப்பத்தூர் எஸ்.பி அற்புதமான முயற்சியை தொடங்கி உள்ளார். இதன் மூலம் போலீசார் செயல்முறைகள் மேம்பட உதவுவதோடு குடிமக்களுக்கும் அதிக ஊக்கமளிக்கும்“ என்றுள்ளார்.


First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading