#CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!

#SureshRaina becomes first Indian cricketer to script MASSIVE #T20record | ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். #CSKvRR

#CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!
சுரேஷ் ரெய்னா. (BCCI)
  • News18
  • Last Updated: April 1, 2019, 4:01 PM IST
  • Share this:
இந்திய டி-20 கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

CSK, MS Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)



இதன்மூலம், நடப்பு ஐ.பி.எல் சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அத்துடன், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ‘சின்ன தல’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும், இந்திய டி-20 கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

Suresh Raina, சுரேஷ் ரெய்னா
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சுரேஷ் ரெய்னா. (BCCI)
இந்தியாவில் நடந்த டி-20 போட்டிகளில் மொத்தம் 6,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். சர்வதேச டி-20 அரங்கில் சுரேஷ் ரெய்னா 288 இன்னிங்ஸில் களமிறங்கி 8,058 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் மட்டும் ரெய்னா 175 போட்டிகளில் விளையாடி 5,070 ரன்கள் அடித்துள்ளார்.

வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!

ஹாட்ரிக் தோல்வி.. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... அதிருப்தியில் ராஜஸ்தான் அணி!

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

Also Watch...







POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்