முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு விடுவிப்பு

சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம்.

மும்பையில் உள்ள ட்ராகன் ஃபிளை கிளப்பில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

 • Share this:
  மும்பையில் உள்ள ட்ராகன் ஃபிளை கிளப்பில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

  மும்பை விமான நிலையம் அருகே உள்ள ட்ராகன் பிளை கிளப்பில் சுரேஷ் ரெய்னா திங்கள் இரவு கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டார். இதில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதையடுத்து அதிரடி சோதனை மேற்கொண்ட மும்பை போலீஸார் 7 ஊழியர்கள் உட்பட சுரேஷ் ரெய்னா மற்றும் 34 பேரை காவலில் வைத்தனர். பிறகு ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா ஆகியோர் விதிமுறைகளை மீறியதற்கான சட்டப்பிரிவு 188-ன் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

  ட்ராகன் பிளை கிளப் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் மீறி திறந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  சுரேஷ் ரெய்னா ஒரு மதிப்பு மிக்க இந்திய கிரிக்கெட் வீரர் இவர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தோனியுடன் சேர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

  மகாராஷ்டிரா இந்தியாவின் கோவிட் மையமாக இருப்பதால் அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளும் இரவு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 22 முதல் ஜனவரி 15 வரை இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.

  இந்நிலையில் இந்த கிளப்பில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: