சின்ன தல என்று சிஎஸ்கே ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். இதன் மூலம் அவர் பிசிசிஐ என்.ஓ.சி. பெற்று வெளிநாட்டு டி20 லீகுகளில் விருப்பப் பட்டால் ஆட முடியும்.
2020 ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலா தோனி, சின்ன தல ரெய்னா இருவரும் அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர். 2021 ஐபிஎல் வரை ஆடினார், ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்கு முன் ரெய்னா விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தன் முடிவு குறித்து கூறிய ரெய்னா, “என் நாட்டுக்கு ஆடியது பெரிய கவுரவம் ஆகும். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எந்த வடிவத்தில் ரெய்னா ஆடினாலும் அவரால் வெளிநாட்டு டி20 லீகுகளில் ஆட முடியாது, இப்போது இந்த ஓய்வு அறிவிப்பால் அவர் அதற்குத் தகுதி பெறுகிறார்.
கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 லீகிலும் யுஏஇயில் நடைபெறும் லீகிலும் பெரும்பாலும் ஐபிஎல் உரிமையாளரகளே அணிகளை வாங்கியிருப்பதால் ரெய்னாவுக்கு அங்கு விளையாட வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக அபுதாபியில் சிஎஸ்கேவுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ரெய்னா ஆடினார். இந்தியாவுக்காக ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20க்களில் ஆடியுள்ளார். 2011 உலகக்கோப்பையை வென்றதில் ரெய்னாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ரெய்னா 205 போட்டிகளில் 5,528 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் ஓய்வு பெற்றது அவரது ரசிககர்களுக்கு ஒரு பெரிய துயரம்தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, IPL, Suresh Raina