முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி கேப்டன் சூரஜ் லதா தேவியை 3 மணி நேரம் கொடூரமாகத் தாக்கிய கணவர்

இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி கேப்டன் சூரஜ் லதா தேவியை 3 மணி நேரம் கொடூரமாகத் தாக்கிய கணவர்

  • Last Updated :

முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி கேப்டனும், அர்ஜூனா விருது வென்றவருமான சூரஜ் லதா தேவி தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2002-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி லதா தேவி தலைமையில் 3 தங்கபதக்கத்தை வென்றது. இவர் பங்கேற்று வென்ற 2003 ஆப்ரோ ஆசிய விளையாட்டு மற்றும் 2004 ஆசிய கோப்பை தான் 'ஷக் தே இந்தியா' படம் உருவாக ஊக்கமளித்த நிகழ்வாக இருந்தது.

இந்நிலையில் இவர் தனது கணவர் தன்னை கொடூரமாக தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக வரதட்சனை என்றும் கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு இவர் திருமணம் செய்தது கொண்டது முதல் இவரது கணவரால் மனஉளைச்சல் மற்றும் உடல்ரீதியான சித்ரவதைக்கு ஆளானதாக புகாரில் கூறி உள்ளார்.

சூரஜ் லதா தேவியின் கணவர் கே.எஸ்.சாந்தகுமார் மேற்கு மும்பை ரயில்வேயின் முன்னாள் ஊழியர். கடந்த நவம்பர் மாதம் சாந்த குமார் மதுப்போதையில் லதா தேவியின் கை கால்களை கட்டி 3 மணி நேரமாக தாக்கி உள்ளார். இதனால் அவரது உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Also Read : புதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்... இந்திய டெஸ்ட் அணி இதுதானா?

இந்த சம்பவம் பஞசாப்பின் கபுர்லா என்ற இடத்தில் நடைபெற்று உள்ளது. அதனையடுத்து சூரஜ் லதா தேவி 2020 ஜனவரி 10 அன்று மணிப்பூரின் ஹெய்காங் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சுல்தான்பூர் லோதி காவல் நிலைய அதிகாரிகள் லத்தாவின் கணவர் சாந்தா குமார் சிங் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

First published: