ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

#SupremeCourt Cancels Life Ban On #Sreesanth, Asks #BCCI To Reconsider Punishment | மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள மனுவிற்கு, பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். (Getty Images)
  • News18
  • Last Updated: March 15, 2019, 2:23 PM IST
  • Share this:
ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் செய்தை டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதில், தொடர்புடையவர்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர்.

Sreesanth, Spot-fixing, ஸ்ரீசாந்த்
டெஸ்ட் போட்டியின்போது ஸ்ரீசாந்த். (Reuters)சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Sreesanth, Spot-fixing, ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த். (கோப்புப்படம்)


இந்த வழக்கின் இன்று தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள மனுவிற்கு, பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Also Watch...

First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்