ஐபிஎல் தொடரில் வில்லியம்சன் பங்கேற்பதில் சிக்கல்!

#SunrisersHyderabad's #KaneWilliamson to miss start of #IPL2019? | வில்லியம்சன் தோளில் ஏற்பட்ட காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

ஐபிஎல் தொடரில் வில்லியம்சன் பங்கேற்பதில் சிக்கல்!
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன். (AP)
  • News18
  • Last Updated: March 12, 2019, 4:05 PM IST
  • Share this:
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், மூன்றாவது போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி வெலிங்டனில் நடந்தது.

முதல் 2 நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி மூன்று நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்த போது, இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வில்லியம்சனுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரின் காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. முழுமையாக குணமடையாத நிலையில் வில்லியம்சன் அடுத்த போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வில்லியம்சன் விளையாடி வந்தார். தற்போது அவர் காயமடைந்து இருப்பதால் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி... மீதிதான் கோலி: முன்னாள் கிரிக்கெட் வீரர்!

நாளை கடைசி போட்டி... இந்திய அணியில் என்ன மாற்றம்...?

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading