ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தனது பேட்டிங் போலவே பயிற்சிப் பொறுப்பை ராகுல் திராவிட் கையாள்வார்: கவாஸ்கர்

தனது பேட்டிங் போலவே பயிற்சிப் பொறுப்பை ராகுல் திராவிட் கையாள்வார்: கவாஸ்கர்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் திராவிட் ஆகியோரிடையே உள்ள ஒற்றுமையை வலியுறுத்திய சுனில் கவாஸ்கர், இவர்கள் மூவரும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  ராகுல் திராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர், ரவி சாஸ்திரி ஒரு வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளதால் நிச்சயம் ராகுல் திராவிடுக்கும் பிரஷர் இருக்கவே செய்யும். இன்று டி20 போட்டி ஜெய்ப்பூரில் நியூசிலாந்துக்கு எதிராகத் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா, ராகுல் திராவிட் புதியக் கூட்டணி களம் காண்கிறது. புதுமுகங்களுடன் இந்திய டி20 அணி சோபிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  ராகுல் திராவிட் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படுபவர், அவர் ஆடிய காலத்தில் பல இன்னிங்ஸ்களில் காப்பாற்றியுள்ளார். அடிலெய்டில் எடுத்த 233, 78 நாட் அவுட், இந்திய அணி வென்ற அது போன்ற இரண்டு இன்னிங்ஸ்களை சச்சின் டெண்டுல்கர் கூட ஆடியதில்லை.

  இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறும்போது, “ராகுல் திராவிட் பேட் செய்யும் போது, அவர் கிரீசில் இருக்கும் வரை இந்திய அணி பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் பிறக்கும். அதே போல் புதிய பயிற்சியாளர் பொறுப்பையும் அவர் தன் பேட்டிங்கில் காட்டிய அதே பொறுப்புடன் சுலபமாகக் கையாள்வார் என்றே நினைக்கிறேன்.

  ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது அமைதி, பொறுமையைப் பார்த்தோமானால் ராகுல் திராவிட் போலத்தான் கொஞ்சம் அமைதியானவர்களே. எனவே இவர்களிடையே பிணைப்பும் புரிதலும் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

  ரவி சாஸ்திரி 5 ஆண்டுகளில் இந்திய அணிப் பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி பெரும்பாலும் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் வெற்றி ஆதிக்கம் செலுத்தியது, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மட்டும்தான் தோல்வி அடைந்தோம், டி20 யில் மிக மோசமாக ரவிசாஸ்திரி, விராட் கோலி கூட்டணிக்கு முடிந்தது.

  ஐசிசி டிராபி வெல்லாவிட்டாலும் அணியினடத்தில் பெரிய அளவில் தன்னம்பிக்கையை ரவிசாஸ்திரி உருவாக்கினார். ஆஸ்திரேலியாவில் போய் இருமுறை டெஸ்ட் தொடரை வெல்வது இனி நடக்குமா என்று தெரியவில்லை,இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. ஆகவே ராகுல் திராவிட்டுக்கு கொஞ்சம் பிரஷர் கூடத்தான்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Rahul Dravid, Rohit sharma, Virat Kohli