உலகக் கோப்பை முதல் போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கோப்பை முதல் போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி
கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 29, 2019, 5:43 PM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட், தொடர் நாளை இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்க உள்ளது.


தென்னாப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தொடக்க போட்டியில் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயிற்சியின் போது ஸ்டெயின்


ஐ.பி.எல் தொடரின் போது பெங்களூரு அணிக்காக ஸ்டெயின் விளையாடிய போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார்.ஸ்டெயின் இன்னும் முழு உடல்தகுதி எட்டவில்லை என்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 2வது லீக் போட்டியில் ஸ்டெயின் விளையாடுவது சிரமம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு எதிரான 3வது லீக் போட்டியில் ஸ்டெயின் விளையாடுவார் என எதிர்பாரக்கப்படுகிறது.

Also Watch

First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading