கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோகமா.. ! - வைரல் வீடியோ

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோகமா.. ! - வைரல் வீடியோ
INDvsAUS
  • Share this:
இந்தியாவிற்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கணை விநோதமான முறையில் ரன் அவுட்டாகாமல் தப்பித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ஆஸ்திரேலியாவில் இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணி மோதிய முத்தரப்பு கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்றது. இதில் லீக் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 155 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத் மூணி அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார்.


இதை தொடர்ந்து இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற வீராங்கணைகள் சோபிக்காததால் 20 ஓவர்களின் முடிவில் 144 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

Also Read : “ஏப்ரல்ல வா.. உன்ன வச்சுக்கிறேன்“ நியூசிலாந்து வீரரின் லந்துக்கு பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்
 இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மெக் லானிங் சிங்கிள் எடுக்க விரைவாக முயற்சித்தார். மிட் ஆனிலிருந்த ஷிகா பாண்டே விரைவாக பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி வீசுவார். ஆனால் பந்து ஸ்டெம்ப் மைக்கின் ஒயரில் பட்டதால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகி விடும்.



ஸ்டெம்ப் மைக்கில் பந்து படாமல் மட்டும் இருந்திருந்தால் கட்டாயம் ரன் அவுட்டாகி இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கும் அது ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கும். போட்டியின் முடிவில் மாற்றமும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உருவாக்கி இருக்கலாம்.

ஆனால் இந்திய அணியின் துரதிருஷ்டத்தால் அந்த வாய்ப்பு தள்ளிப் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading