ஆஸ்திரேலிய முன்னாள் லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்

ஆஸ்திரேலிய முன்னாள் லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்

முன்னாள் ஆஸி. லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில்

ஏப்ரல் 14ம் தேதி நடந்த இந்தக் கடத்தல் சம்பவத்தில் போலீசார் 50 வயது நபர் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர், ஆனால் அந்த 50 வயது நபர் வேறு யாருமல்ல ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஸ்டூவர்ட் மெகில்தான் என்று ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவித்தன.

 • Share this:
  கடந்த மாதம் சிட்னியில் ஆஸ்திரேலிய முன்னாள் லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் அவரது வீட்டிலிருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் புதனன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  ஏப்ரல் 14ம் தேதி நடந்த இந்தக் கடத்தல் சம்பவத்தில் போலீசார் 50 வயது நபர் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர், ஆனால் அந்த 50 வயது நபர் வேறு யாருமல்ல ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஸ்டூவர்ட் மெகில்தான் என்று ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவித்தன.

  சிட்னி வடக்குப் பகுதியில் தெருவில் ஒருநபருக்கும் மெகிலுக்கும் ஏதோ சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு எங்கிருந்தோ காரில் வந்த 2 பேர் மற்றும் அந்த நபர் சேர்ந்து மெகிலை காருக்குள் தள்ளி கடத்திச் சென்றனர். பிறகு சிட்னி புறநகர்ப்பகுதிக்கு காரை ஓட்டிச் சென்று மெகிலைத் தாக்கியுள்ளனர், பிறகு வேறொரு புறநகர்ப்பகுதிக்கு ஓட்டிச் சென்று அங்கு மெகிலை விடுவித்துள்ளனர்.

  இந்தச் சம்பவம் நியுசவுத் வேல்ஸ் போலீசாரிடம் ஏப்ரல் 20ம் தேதியன்றுதான் புகாராக வந்தது என்கிறது போலீஸ் தரப்பு.

  இந்தச் சம்பவம் புகாராக வந்தவுடன் ஆஸ்திரேலிய போலீசார் விசாரணையைத் தொடங்கி மர்ம நபர்களை தேடினர். இந்நிலையில் 27, 29, 42, மற்றும் 46 வயது உடைய 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று காலை உள்ளூர் நேரம் 6 மணியளவில் கைது செய்துள்ளனர்.

  உள்ளூர் காவல்நிலையத்தில் இந்த 4 மர்ம ஆசாமிகளையும் கைது செய்து லாக்-அப்பில் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

  ஸ்டூவர்ட் மெகில் முன்னாள் லெக் ஸ்பின்னர், இவர் 44 டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷேன் வார்ன் காலத்தில் அவருடன் இவர் வீசியதால் வார்னின் ஆளுமையில் இவரது ஆட்டத்திறன் வெளியில் வரவில்லை. எப்படிப்பார்த்தாலும் 44 டெஸ்ட்களில் 208 விக்கெட்டுகள் என்பது சாதாரணமல்ல.
  Published by:Muthukumar
  First published: