ஆஸி.கோட்டையைத் தகர்த்த இந்திய அணியை எதிர்கொள்ள வலுவான இங்கிலாந்து அணி அறிவிப்பு

பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.

ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

  • Share this:
    சென்னையில் பிப்.5ம் தேதி தொடங்கவிருக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    16 பேர் கொண்ட இந்த இங்கிலாந்து அணியில் இடது கை அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்புயல் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜானி பேர்ஸ்டோவுக்கு ஓய்வு அளித்துள்ளது இங்கிலாந்து.

    ஆலி போப் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார், அவர் ஃபிட்னெஸ் உறுதியானவுடன் அணியில் சேர்க்கப்படவிருக்கிறார். ஜோஸ் பட்லர் முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு இங்கிலாந்து செல்கிறார், அவரது இடத்தை பென் ஃபோக்ஸ் நிரப்புவார். அதே போல் தொடக்க வீரர் பர்ன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார்.

    இந்தியப் பிட்ச்கள் குறிப்பாக சென்னை பிட்ச் ஸ்பின்னர்களுக்கு முதல்நாளிலிருந்தே உதவும் என்பதால் இங்கிலாந்து அணியில் மொயின் அலி இடம்பெற்றுள்ளார்.

    ஆனால் அதிவேகம் வீசும் மார்க் உட், ஆல்ரவுண்டர் சாம் கரன் அணியில் இடம்பெறாதது கேள்விக்குறியாகியுள்ளது.

    இங்கிலாந்து அணி வருமாறு:

    ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

    மாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிரேசி, மேசன் கிரேன், சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன், ஆலி ராபின்சன், அமர் விர்டி.
    Published by:Muthukumar
    First published: