ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்! உலகக்கோப்பைத் தொடரும் கேள்விக்குறி

#IPL2019 ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகுவது தொடர் கதையாகவே உள்ளது.

news18
Updated: April 25, 2019, 7:45 PM IST
ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்! உலகக்கோப்பைத் தொடரும் கேள்விக்குறி
IPL
news18
Updated: April 25, 2019, 7:45 PM IST
ஐ.பி.எல் லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மோதிவருகின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறி உள்ளது. மும்பை, டெல்லி அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 4வது இடத்திற்கு தான் மற்ற அணிகள் போட்டி போட்டு கொண்டிருக்கிறது.

ஐபிஎல் லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெற்று பெங்களூரு அணி 7-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நீல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அழைக்கப்பட்டார்.

டேல் ஸ்டெயின்


கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு எதிராக பந்துவீசிய டேல் ஸ்டெயின் 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஆனால் தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெயின் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக நிர்வாகம் தெரிவித்தள்ளது. மேலும் தோல்பட்டை காயம் பலமாக இருப்பதால் அவர் உலகக்கோப்பைத் தொடரிலும் பங்கேற்பது கேள்வி குறியாகவே உள்ளது.

Also Watch:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...