டெஸ்ட் தரவரிசை பட்டியல் : ஒரு புள்ளியில் முதலிடத்தை தவறிவிட்ட விராட் கோலி!

Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 4:54 PM IST
டெஸ்ட் தரவரிசை பட்டியல் : ஒரு புள்ளியில் முதலிடத்தை தவறிவிட்ட விராட் கோலி!
விராட் கோலி
Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 4:54 PM IST
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்தாலும், 2வது இன்னிங்சில் டக் அவுட்டானார். இதனால் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார்.
ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 903 புள்ளிகள் உடன் 2ம் இடத்தில் உள்ளார்.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2015 டிசம்பர் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார். அதிலிருந்து 2018 ஆகஸ்ட் மாதம் வரை ஸ்மித் தான் முதலிடத்தில் இருந்தார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒராண்டு தடை விதிக்கப்பட்டதால் ஸ்மித்தின் இடத்தை விராட் கோலி பிடித்தார். தற்போது மீண்டும் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடினால் முதலிடத்திற்கு முன்னேற வாய்புள்ளது.

பந்து வீச்சாளர்களில் தரவரிசை பட்டியலில் பும்ரா 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளார். ஜடேஜா 11வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.

Loading...

Also Watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...