• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித். (BCCI)

ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித். (BCCI)

#SteveSmith Posts Farewell Message For #RajasthanRoyals | ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடப்பு ஐ.பி.எல் சீசனின் முக்கியமான கட்டத்தில் தொடரில் இருந்து ஸ்மித் விலகியதால் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும், டெல்லி கேப்பிடல்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

    3-வது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 4-வது இடத்தில் 12 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 5-வது இடத்தில் 11 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உள்ளன.

    Rajasthan Royals, IPL,
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. (BCCI)


    ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    அண்மையில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் இடம் பிடித்திருந்தார். இதனால், மே 30-ம் தேதி தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புகிறார்.




    முக்கியமான நேரத்தில் ஸ்மித் விலகியதால், ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை?

    ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: